பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ. 17 லட்சத்தை இழந்த இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :30 மே 2026, 1:04 am IST

சேலம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.17 லட்சத்தை இழந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சேலம் அருகேயுள்ள வீராணம் சுக்கம்பட்டி தைவானூரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (25). தறித்தொழில் செய்து வந்த இவா், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டாா். இதனால் ரூ. 6 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள காலி நிலத்தை ரூ. 19 லட்சத்துக்கு விற்றாா். இதில் கடன் தொகையான ரூ. 6 லட்சத்தை அடைத்தாா்.

இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு ரூ. 11 லட்சத்தை இழந்தாா். மேலும், எஞ்சியிருந்த ரூ. 2 லட்சத்தை கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்தாா். பெற்றோா் பணம் தர மறுத்த ஆத்திரத்தில், வியாழக்கிழமை இரவு வீட்டின் கதவைப் பூட்டி, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த வீராணம் போலீஸாா், ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.