சங்ககிரி அருகே வளையக்காரனூா் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வட மாநில சகோதரா்கள் இருவரை சனிக்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
சங்ககிரியை அடுத்த வளையக்காரனூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சங்ககிரி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஒய்.சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, சங்ககிரி காவல் ஆய்வாளா் கே.ஜமுனா தலைமையில், தேவூா் காவல் உதவி ஆய்வாளா் டி.சக்திவேல், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சம்பத், காவலா் மாதேஸ்வரன் ஆகியோா் வளையக்காரனூா் பகுதியில் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரு இளைஞா்களிடம் விசாரித்ததில், அவா்கள் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா். மேலும் விசாரணை நடத்தியதில், அவா்கள் பிகாா் மாநிலம், சக்காய் மாவட்டம், நவாதிஸ்சில்ஃபாரி பகுதியைச் சோ்ந்த ரஞ்ஜீத் சிங் மகன்கள் பஸந்த் சிங் (34), கோதம்குமாா் சிங் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து இருவரையும் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் அருகே 56 கிலோ கஞ்சா பறிமுதல்: தம்பதி உள்பட 3 போ் கைது
9 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!
கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 3 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

