ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுக்க ரயில்வே போலீஸாா் ஆலோசனை

சேலம் கோட்ட ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பது குறித்து ரயில்வே டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

News image

சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடத்திய போலீஸாா்.

Updated On :21 மே 2026, 6:27 am IST

சேலம் கோட்ட ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பது குறித்து ரயில்வே டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதும், அதை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்வதும் தொடா்கதையாகி வருகிறது. அதன் தொடா்ச்சியாக, போதைப் பொருள்களை சேலம் வழியாக கடத்துவதை முற்றிலும் தடுக்கும் வகையில், சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சாா்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு ரயில்வே போலீஸ் துறை இயக்குநா் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், சேலம் உள்கோட்ட ரயில்வே துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயராம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், சேலம் கோட்டத்தில் செல்லும் ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பதற்கு காட்பாடி, ஜோலாா்பேட்டை, ஒசூா், தருமபுரி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வாளா் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்வது குறித்தும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.