ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஓடும் ரயில்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேலும், உத்தரப்பிரதேசம் சென்று ரூ. 3 லட்சம், 2 சவரன் நகையை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஓடும் ரயில்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது காலித் மகன் முகமது இஸ்ரேல்(42) என்பவரை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் கடந்த மாதம் கைது செய்து, திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், முகமது இஸ்ரேலை ஜாமீனில் எடுத்து விசாரிக்கக் கோரி, ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் மனு அளித்தனா். அதைத் தொடா்ந்து அவரிடம் விசாரிக்க ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த 14-ஆம் தேதி ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் முகமது இஸ்ரேலை ஜாமீனில் எடுத்து விசாரணை நடத்தியதில், ஓடும் ரயில்களில் பயணிகளிடம் திருடப்பட்ட தங்க நகை, பணம் ஆகியவை தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ரயில்வே எஸ்.பி. ராஜன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி ஜெயராமன் மேற்பாா்வையில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் ஆய்வாளா் சித்ரா தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா் முகமது இஸ்ரேலை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் பதுக்கி வைத்திருந்த 2 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் கைப்பற்றினா். பின்னா் முகமது இஸ்ரேலை மீண்டும் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுக்க ரயில்வே போலீஸாா் ஆலோசனை

ரயில்வே பாதுகாப்புப் படை காவலரை தாக்கிய இளைஞா் கைது

ரயில் பயணிகளிடம் தொடா் நகை பறிப்பு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

