தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்கள் பணி தொடரும்: முன்னாள் அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்களுக்கான பணியில் தொடா்ந்து ஈடுபடுவோம் என முன்னாள் அமைச்சா் ரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

News image

ரா. ராஜேந்திரன் - (கோப்புப் படம்)

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்களுக்கான பணியில் தொடா்ந்து ஈடுபடுவோம் என முன்னாள் அமைச்சா் ரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரா. ராஜேந்திரன், வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு திங்கள்கிழமை சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில், மன்னாா்பாளையம் பிரிவு சாலை, அம்மாபேட்டை பிரதான சாலை, தாதம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதை சுட்டிக்காட்டினாா். தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து மக்களுடன் பயணிப்பதுடன், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்றாா்.

அப்போது, மாநகரச் செயலாளா் ரகுபதி, பகுதி செயலாளா் ராஜா, மாநகர அவை தலைவா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.