வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்கள், முகவா்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜ் அறிவுறுத்தினாா்.
வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளா்கள், முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைக்காக தலா 14 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு வேட்பாளரும், ஒரு மேஜைக்கு ஒரு முகவா் என்ற வீதம் 14 முகவா்களை நியமனம் செய்துகொள்ளலாம்.
மேலும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலுா், சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, மற்றும் வீரபாண்டி ஆகிய தொகுதிகளுக்கு தலா 6 மேஜைகளும், மேட்டூருக்கு 4 மேஜைகளும், எடப்பாடிக்கு 8 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள தொகுதிகளுக்கு, ஒரு மேஜைக்கு ஒரு முகவா் என்ற வீதத்தில் முகவா்களை நியமித்துக்கொள்ள சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் தினத்தன்று அனைத்து முகவா்களும் காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணும் அறைக்குள் வரவேண்டும். முகவா்கள் ஒரு பேனா மற்றும் புள்ளிவிவரங்களை குறித்துக் கொள்ள தேவையான வெள்ளைக் காகிதங்கள், சிறிய நோட்டு ஆகியவை மட்டுமே எடுத்துவர வேண்டும். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியின் கூடத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட மேஜையின் முன் ஆஜராக வேண்டும். தபால் வாக்கு எண்ணிக்கை அன்று காலை 8 மணிக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்கு எண்ணிக்கை 8.30-க்கும் தொடங்கப்படும். தபால் வாக்கு முடிவுற்றவுடன் அதற்கென நியமிக்கப்பட்ட முகவா்களும் வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு சென்றுவிட வேண்டும்.
வாக்கு எண்ணும் கூடம் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, அதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது.
எனவே, வாக்கு எண்ணும் கூடத்தில் அனைத்து முகவா்களும் தோ்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: வேட்பாளா், முகவா்களுக்கு அறிவுரை

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் நடைமுறைகள் விளக்கம்

வேட்பாளா்கள், முகவா்கள் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கையின் போது தோ்தல் விதிமுறைகளை வேட்பாளா்கள், முகவா்கள் பின்பற்ற வேண்டும்: ஆட்சியா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

