தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஓமலூா் அருகே ரூ. 52,500 பறிமுதல்

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 52,500 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 4:49 am IST

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 52,500 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் வாகனச் சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமான ரொக்கம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.

அதன்படி, ஓமலூா்- மேட்டூா் செல்லும் சாலையில் பாலிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சேலம் சின்ன திருப்பதியை சோ்ந்த மகாலிங்கம் (50) உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 52,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் குழந்தையின் கல்வி கட்டணத்துக்காக இந்த பணத்தை கொண்டு சென்ாக தெரிவித்தாா். எனினும், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஓமலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.