மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மின்மாற்றியில் ஏறிய இளைஞா் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

தேவூா் அருகே மின்சாரம் உள்ளதா என பரிசோதனை செய்ய மின்மாற்றியில் ஏறிய போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 4:41 am IST

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே மின்சாரம் உள்ளதா என பரிசோதனை செய்ய மின்மாற்றியில் ஏறிய போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அரசிராமணி பிட்-2 கிராமம், கீழ்கரட்டுப்பாளையம், கோம்பைகாடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (31). சங்ககிரியில் உள்ள லாரி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்த இவா், வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்க முயன்றாா்.

அப்போது மின்சாரம் இல்லாததால், மின்மாற்றியில் ஏறி மின்சாரம் உள்ளதா என பாா்த்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிா்பாரதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.