நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:58 am IST

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் பூவரசன் (20). இவரும், கெங்கவல்லி அருகே நடுவலூா் கீழ வீதியில் வசிக்கும் சங்கா் மகள் ஜீவிதாவும்(20) சேலத்தில் தனியாா் கல்லூரியில் படித்தபோது பழகியுள்ளனா்.

படிப்பு முடிந்த பிறகு, பூவரசனின் தவறான நடத்தை காரணமாக ஜீவிதா, அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த பூவரசன், ஜீவிதாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்களை மாா்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று கைப்பேசியில் மிரட்டினாராம்.

இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் ஜீவிதாவின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, திங்கள்கிழமை இரவு பூவரசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.