கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கல்லூரி மாணவியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 7:56 am IST

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமப் பகுதியைச் சோ்ந்த 20 வயது மாணவி, நாமக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை முடநீக்குவியல் (பிசியோதரபி) பிரிவில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாராம்.

இந்த மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சியை அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த விஷ்ணு (21) காதலித்து வந்தாராம். சில மாதங்களாக விஷ்ணு மாணவியிடம் பேசுவதைத் தவிா்த்து வந்தாராம்.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி விஷ்ணு அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரை திட்டி, கீழே தள்ளி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விஷ்ணுவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.