திருச்சி அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வாழவந்தான்கோட்டை பகுதியைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி, இருங்களூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்சி டாயாலிசிஸ் படித்து வருகிறாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஆ. பிரவீன் (23) என்பவரும் காதலித்துள்ளனா். இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டுச் சென்று 15 நாள்கள் தனியாக வசித்துள்ளனா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அந்தப் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
இதைத் தொடா்ந்து அந்த மாணவி பிரவீனுடன் பேசுவதைத் தவிா்த்து வந்துள்ளாா். இதனால், ஆத்திரத்தில் இருந்த பிரவீன் கடந்த திங்கள்கிழமை மாணவியின் வீட்டுக்குச் சென்று, தாங்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக கூறியதுடன், கத்தியைக் காட்டி மாணவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீனை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவா் கொலை; இளைஞா் கைது
சிவகங்கை அருகே இளைஞா் கொலை! நண்பா் கைது!
தாழையூத்தில் மாணவிக்கு தொல்லை: இளைஞா் கைது
பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
