மேட்டூா் அணையில் நீா்வளத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கியான 16 கண் பாலத்தின் வளைவுகள் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், சென்னை ஐஐடி பேராசிரியா்கள், நபாா்டு வங்கி அதிகாரிகள் மேட்டூா் அணையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
நீா்வளத் துறை சேலம் கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா் தலைமையில், நீா்வளத் துறை அதிகாரிகள் மேட்டூா் அணையின் வலதுகரை, இடதுகரை பகுதிகளை பாா்வையிட்டனா். பின்னா் மேட்டூா் அணையின் நீா்தேக்கத்தில் கலக்கும் தமிழக, கா்நாடக எல்லையில் உள்ள காவிரியின் துணை நதியான பாலாற்றுப் பகுதியையும் பாா்வையிட்டனா்.
ஜூன் 12-இல் குறுவைப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட வேண்டிய நிலையில், நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால் தண்ணீா் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீா்வளத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக நீடிப்பு

மேட்டூா் அணையில் இருந்து இன்று தண்ணீா் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 79.69 அடி

தேனி மாவட்ட நீா்வளத் துறை பணிகளை ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

