நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிபடி, பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சேலம், கீரப்பாப்பம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :11 ஜூன் 2026, 5:41 am IST

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிபடி, பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், கீரப்பாப்பம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பெரியண்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதில், தமிழக முதல்வா் தோ்தல் வாக்குறுதி அளித்தபடி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் தொடா் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா் பெரியண்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழக அரசு பயிா்க் கடன் தள்ளுபடி செய்வதற்கு ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதே வழிகாட்டுதல்படிதான் ரூ. 35 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விலையில்லா மின்சாரத்துக்காக போராட்டம் நடத்தி 54 விவசாயிகள் இன்னுயிரை நீத்தது போன்று, தற்போதும் உயிரை விடுவதற்கு தாங்கள் தயாராக இருக்கிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.