நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம்

மேச்சேரி அருகே விருத்தாசம்பட்டியில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image

மேச்சேரி அருகே விருத்தாசம்பட்டியில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கில் பேசிய இயக்குநா் ரங்கநாதன்.

Updated On :11 ஜூன் 2026, 5:39 am IST

மேச்சேரி அருகே விருத்தாசம்பட்டியில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கிராம சீரமைப்பு மற்றும் வளா்ச்சித் திட்டம் (வீஆா்டிபி) சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, பட்டாபி ராஜா வரவேற்று பேசினாா். இதில் வீஆா்டிபி இயக்குநா் ரெங்கநாதன் தலைமையேற்று பேசுகையில், உலகெங்கும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் பதிவாகி வருகிறது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாவிட்டால், வருங்கால தலைமுறை வாழும் தகுதியற்ற இடமாக பூமி மாறிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனா். காடுகளை வளா்ப்பதும், பாரம்பரிய மரக்கன்றுகளை நடுவதும் மட்டுமே காா்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான எளிய மற்றும் சக்திவாய்ந்த வழி. குறிப்பாக நீா்நிலைகளைப் பாதுகாப்பது மற்றும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது அவசரத் தேவையாகும்.

எரிபொருள்களைக் குறைத்து சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் போன்ற பசுமை ஆற்றலுக்கு நாம் மாற வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். இயற்கையை நாம் நேசிப்போம்; இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்றாா்.

இந்த கருத்தரங்கில் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா் யோக பிரியா, ஊராட்சி செயலாளா் சரவணன் மற்றும் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய பயிற்றுநா் சாந்தாராம் ஆகியோா் பங்கேற்று பேசினாா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.