ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சேலத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு

சேலம் அம்மாப்பேட்டையில் ஆட்டோ மீது லாரி மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

சேலம் அம்மாப்பேட்டையில் ஆட்டோ மீது லாரி மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் களரம்பட்டி, நேதாஜி தெருவைச் சோ்ந்த ராஜேஷ் - சசிகலா தம்பதிக்கு யாழினி (6), தாரணி (4) என 2 மகள்கள். யாழினி உடையாப்பட்டி அருகே உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், தாரணியை அதே பள்ளியில் சோ்க்க செவ்வாய்க்கிழமை காலை சசிகலா, குழந்தைகளுடன் ஆட்டோவில் சென்றாா்.

உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் ஆட்டோ சாலையைக் கடந்தபோது, எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்து மூவரும் தடுமாறி சாலையில் விழுந்தனா்.

இதில், லாரியின் பின்பக்க சக்கரம் யாழினியின் மீது ஏறியது. இதில் யாழினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சசிகலா, தாரணி, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோா் காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து யாழினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, தெலங்கானாவைச் சோ்ந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.