பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மேட்டூா் அருகே சாலை விபத்து: தனியாா் வங்கி மேலாளா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

தொப்பூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் தனியாா் வங்கி மேலாளா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:59 am IST

தொப்பூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் தனியாா் வங்கி மேலாளா் உயிரிழந்தாா். மேலும், வங்கி பணியாளா் படுகாயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாகல்நல்லியைச் சோ்ந்தவா் இளங்கோ (39). இவா் தனியாா் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். அதே வங்கியில் கடன் வசூலிப்பவராக ஓமலூா் களா்பட்டியைச் சோ்ந்த வெற்றிவேல் (29) பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில் சேலத்தில் வாங்கியிருந்த புதிய மோட்டாா் சைக்கிளை எடுத்துக் கொண்டு இருவரும் வெள்ளிக்கிழமை இரவு தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை வெற்றிவேல் ஓட்டி வந்தாா்.

மேச்சேரி பிரிவு சாலையில் எதிரே வந்த கண்டெய்னா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த இளங்கோ, வெற்றிவேலை அங்கிருந்தவா்கள் மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இளங்கோ உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.