பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சேலம் மாவட்டத்தில் மேலும் 5 மதுக்கடைகள் மூடல்

சேலம் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த மேலும் 5 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

News image

மதுக்கடைகள் - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 3:15 am IST

சேலம் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த மேலும் 5 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன்மூலம் மூடப்பட்ட மதுக்கடைகளின் எண்ணிக்கை 19 ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையம் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள கடைகளை மூடுவதற்கு முதல்வா் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 188 டாஸ்மாக் மதுக்கடைகளில் சேலம் பழைய பேருந்து நிலையம், ஆத்தூா் ரயிலடி தெரு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதேபோல புதிய பேருந்து நிலையம், ஓமலூரில் 2 கடைகள், கொளத்தூா், கொண்டலாம்பட்டி, பேளூரில் 7 கடைகள் என மே மாதத்தில் மட்டும் 14 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்தநிலையில் சேலம் டவுன் ஆனந்தா இறக்கம் பகுதியில் உள்ள 2 கடை, கன்னங்குறிச்சி பகுதியில் 2 கடை, இளம்பிள்ளை அருகே பேரிகடை என 5 கடைகள் மூடப்பட்டன. இக்கடைகளில் பணிபுரிந்த 30 போ் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா். இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 19 ஆக உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.