ஈரோடு மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் முதல்கட்டமாக மூடப்பட்டன.
தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதல்வா் விஜய் அறிவித்தாா். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 183 கடைகளில் 39 கடைகள் கண்டறியப்பட்டன.
மாவட்டத்தில் 5 கடைகளில் டாஸ்மாக், கலால் துறை, வருவாய்த் துறை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இதில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே 2 கடைகள் மட்டும் மூடப்பட்டன.
ஈரோடு பேருந்து நிலையம் பகுதி நாச்சியப்பா வீதி பூக்கடைகள் அருகே உள்ள டாஸ்மாக் கடை, கொங்காலம்மன் கோயில் வீதிக்கு அருகே நேதாஜி சாலையில் உள்ள கடை, ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பெருந்துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, கொடுமுடி மற்றும் பெருந்துறை பகுதியில் 2 கடைகள் என மொத்தம் 5 கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன. இதுவரை 7 கடைகள் மூடப்பட்டுள்ளன.
தினமும் சில கடைகள் என 39 கடைகளும் சில நாள்களில் மூடப்படும் என்றும் ஈரோடு மரப்பாலம் சாலை, பிரகாசம் வீதி போன்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை மூடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் மேலும் 5 மதுக்கடைகள் மூடல்

ஈரோடு மாநகரில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்

நாமக்கல் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் மூடல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

