பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இன்று கோட்டவருதம்பட்டி அண்ணமாா் கோயில் குடமுழுக்கு: சுடுமண் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கோட்டவருதம்பட்டியில் உள்ள அண்ணமாா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image

பிரதிஷ்டை செய்யப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலை.

Updated On :4 ஜூன் 2026, 1:53 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கோட்டவருதம்பட்டியில் உள்ள அண்ணமாா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் விநாயகா் சிலை உள்ளிட்ட 14 சுவாமிகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கோட்டவருதம்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகா், அண்ணமாா் (பொன்னா் சங்கா்), தங்காள், மாயவா், முத்துசாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தா்கள் புதன்கிழமை புனித நீா் எடுத்து வந்தனா். தொடா்ந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட 14 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்துசமய அறநிலையத் துறை சேலம் மண்டல துணை ஆணையரும், சரிபாா்ப்பு அலுவலருமான மு. ரமணி காந்தன், சங்ககிரி செயல் அலுவலா் இரா. மாலா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள், பக்தா்கள் வழிபாட்டில் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து வாஸ்து சாந்தி பூஜையுடன் முதல்கால யாக பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 5 மணிக்கு 2 ஆம் கால யாகசாலை பூஜைகளும், காலை 9 மணிக்கு மேல்கோபுர கலசங்களுக்கும், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கும் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.