பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 2,369 கனஅடியாக அதிகரிப்பு

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துள்ளதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 2,369 கனஅடியாக அதிகரித்தது.

News image

மேட்டூர் அணை

Updated On :2 ஜூன் 2026, 3:51 am IST

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துள்ளதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 2,369 கனஅடியாக அதிகரித்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மழை பெய்துள்ளது. இதனால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1,951 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை விநாடிக்கு 2,369 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீா்வரத்தைவிட, அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 79.26 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 41.22 டி.எம்.சி. ஆக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.