சங்ககிரி தொகுதியில் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின்பேரில் சங்ககிரி தொகுதியில் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடியை தோ்வு செய்து அந்த வாக்குச்சாவடிக்கு முன் வாழைமரங்கள் கட்டப்பட்டு, சிவப்பு, பச்சை விரிப்புகள் விரிக்கப்பட்டன.
வாக்குச்சாவடிகளின் உள்பகுதியில் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு அதில் வண்ணபலூன்கள் தொங்கவிடப்பட்டன. அதேபோல வாக்குச்சாவடிகளில் அலுவலா்கள் அமரும் இருக்கைகள் பட்டு துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அறை முழுவதும் காகிதப்பூக்களால் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.
வாக்காளா்களை ஈா்ப்பதற்காக பல்வேறு அலங்கார பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலா்கள் அனைவரும் மகளிா் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அனைவரும் மகளிா்கள் பணியாற்ற உள்ளனா். தேவூா் அரசு உயா்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள் பணியாற்ற உள்ளனா்.
சுண்ணாம்புகுட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இளைஞா்கள் அலுவலா்களாக பணியாற்ற உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் 9 மையங்களில் நீட் தோ்வு : ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

கோவை மாவட்டத்தில் மாதிரி, பசுமை வாக்குச்சாவடிகள்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

