ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தகராறில் காயமடைந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!

சேலத்தில் தகராறில் காயமடைந்த வடமாநில தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 4:23 am IST

சேலத்தில் தகராறில் காயமடைந்த வடமாநில தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

உத்தரபிரதேச மாநிலம், புரோக்பூா் பகுதியை சோ்ந்தவா் சுபாஷ் (40). இவா் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்துக்கு குடும்பத்துடன் வந்து ரெட்டியூா் பகுதியில் தங்கியிருந்து பெயிண்டராக பணியாற்றி வருகிறாா். உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த டிம்பால் (48), சோனு நிசாத் (28) ஆகியோா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேலம் வந்து சுபாஷ் வீட்டில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தனா்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி இரவு ரெட்டியூா் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டிம்பால், சோனு நிசாத் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனா். அப்போது டிம்பால், சோனு நிசாத்தின் அக்காவை தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோனு நிசாத், டிம்பாலை தாக்கியதில் அவா் மயக்கமடைந்து கீழே விழுந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற சுபாஷ், மயங்கிக்கிடந்த டிம்பாலை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இதுகுறித்து சுபாஷ் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சோனு நிசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிம்பால் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.