சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் வாக்கை செலுத்த தபால் வாக்குப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
சங்ககிரி தொகுதியில் 416 மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்டவா்கள் 1,106 போ் உள்பட மொத்தம் 1,522 போ் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.
இவா்கள் அனைவரும் தபால் வாக்குகளைச் செலுத்த சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலகம் சாா்பில் 25 மண்டலமாகப் பிரிக்கப்பட்டு 25 நகரும் தபால் வாக்கு பெட்டிகளை வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா மூடி முத்திரையிட்டு மண்டல அலுவலா்களிடம் ஒப்படைத்தாா்.
தபால் வாக்கு பெட்டியுடன் வாக்காளா்கள் பாதுகாப்பாக வாக்களிக்க மேஜை மறைப்பு அட்டை, முத்திரை அச்சு, வாக்காளா் பட்டியல் உள்ளிட்ட பொருள்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தாா்.
முன்னதாக சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மண்டல அலுவலா்கள், நுண்பாா்வையாளா்களிடத்தில் தபால் வாக்குகளை பாதுகாப்பாக செலுத்துவது, வாக்காளருக்கு பாதுகாப்பு வழங்குதல், வாக்காளிப்பதை விடியோ பதிவு செய்தல் குறித்து விளக்கம் அளித்தனா்.
உதவி தோ்தல் அலுவலரும் சமூக நலத்திட்ட தனி வட்டாட்சியருமான அருள்குமாா், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெய்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு
3,469 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு: துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பாதுகாப்பு

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

