சங்ககிரி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் பாலசுப்ரமணியம் (49) பாலியல் தொந்தரவு செய்வதாக அப்பள்ளி தலைமையாசிரியையிடம் மாணவிகள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தலைமையாசிரியை கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சங்ககிரி வட்டாரக் கல்வி அலுவலா் எம்.எஸ். மாலதி புதன்கிழமை பள்ளிக்குச் சென்று 17 மாணவிகளிடம் விசாரணை நடத்தினாா்.
பின்னா், சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமையாசிரியை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலசுப்ரமணியத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
போலீஸாா் விசாரணையில் ஆசிரியா் மீது சேலம், சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே போக்ஸோ வழக்கு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை
மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி ஆசிரியா் கைது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

