தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தம்மம்பட்டியில் இருந்து வெளியூர் செல்லும் இரவு நேர அரசு பேருந்துகள் நிறுத்தம்: மக்கள் அவதி

தம்மம்பட்டியில் இருந்து செல்லும் இரவு நேர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

News image

தம்மம்பட்டி பேருந்து நிலையம்.

Updated On :28 டிசம்பர் 2020, 10:55 am IST

தம்மம்பட்டியில் இருந்து செல்லும் இரவு நேர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், எல்லையில் உள்ள, தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் இருந்து சேலம், ஆத்தூர், சென்னை, பெங்களூரு, ஈரோடு, கோவை, ராசிபுரம், திருச்சி, துறையூர், முசிறி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் மார்க்கங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 
இந்நிலையில்,  கடந்த 20 நாள்களாக, தம்மம்பட்டியில் இருந்து ஆத்தூர், சேலம், ராசிபுரம், துறையூர், திருச்சி ஊர்களுக்கு, இரவு நேரத்தில் செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தொலைதூர ஊர்களுக்கு செல்வோர் திண்டாடி வருகின்றனர். 
இதுதொடரும் நிலையில், சென்னையில் இருந்து விடுமுறைக்கு தம்மம்பட்டி பகுதி ஊர்களுக்கு வந்திருந்தவர்கள் நேற்று இரவு, ஆத்தூர் சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்லலாம் என, தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். ஆனால், இரவு 7.40, 8.20, 8.50, 9.15, 9.20 மணிக்கு தம்மம்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் பேருந்துகள் ஒன்றுகூட வராததால், காத்திருந்தவர்கள் பெரிதும் அவதிக்குள்ளானர். 
அதுகுறித்து, விசாரித்தபோது, கடந்த 20 நாள்களாக இரவு நேர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள விவரத்தை அங்கிருந்த கடைக்காரர்கள் கூறினர். அதையடுத்து, காத்திருந்த அனைவரும், வாடகை கார், வேன்களில் சென்னை செல்வதற்காக, ஆத்தூர் பேருந்துநிலையத்துக்கு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.