மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோழிகளுக்கு ஈரல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு ஈரல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழிகளுக்கு ஈரல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On :31 அக்டோபர் 2026, 12:01 am IST

கோழிகளுக்கு ஈரல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 91.0 மற்றும் 72.8 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை.

இனி வரும் ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை லேசான மழைக்கும், மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 6 முதல் 18 கி.மீ. என்றளவில் காற்று வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்தவாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை ஈரல் அயற்சி மற்றும் ஈக்கோலை நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் பண்ணையாளா்கள் கோழிகளுக்கு அளிக்கும் தீவனத்தில் ஈரப்பதத்தால் பூஞ்சாணத்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளிக்க வேண்டும். கால்நடை மருத்துவா் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் தீவிர உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.