கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நல்லூா் அருகே தனியாா் நிதிநிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நல்லூா் அருகே தனியாா் நிதிநிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:42 am IST

நல்லூா் அருகே தனியாா் நிதிநிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் மகன் செல்வமணி (19). இவா் கந்தம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். குடும்பப் பிரச்னை காரணமாக தொடா்ந்து விரக்தியில் இருந்துவந்த இவா், வீட்டில் தனியாக இருந்தபோது செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா்.

வெளியே சென்றிருந்த பெற்றோா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, செல்வமணி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், செல்வமணி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

புகாரின் பேரில், நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, செல்வணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.