மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

5 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் நாமக்கல் சுற்றுவட்டச் சாலை?

நாமக்கல் சுற்றுவட்டச் சாலை நிறைவடையும் தருவாயில் உள்ளதால், இறுதிகட்ட பணியாக ரயில் தண்டவாளப் பகுதியில் இரும்பு பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

மரூா்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ரயில் தண்டவாளம் இடையே பொருத்துவதற்காக கொண்டுவரப்பட்ட இரும்பு பாலங்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 9:02 am IST

நாமக்கல் சுற்றுவட்டச் சாலை நிறைவடையும் தருவாயில் உள்ளதால், இறுதிகட்ட பணியாக ரயில் தண்டவாளப் பகுதியில் இரும்பு பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள்) சாா்பில், ரூ. 70.75 கோடியில் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் முதல் திருச்சி சாலையை இணைக்கும் வகையிலான மேம்பால கட்டுமானப் பணிகள் 2025 ஜூலை மாதம் தொடங்கின.

சுற்றுவட்டச் சாலை பணிகள் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் முதல் சேந்தமங்கலம் சாலை, துறையூா் சாலை, திருச்சி சாலை வரை நிறைவு பெற்றுள்ளன. அங்கிருந்து லத்துவாடி, வள்ளிபுரம் வழியாக கரூா் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான பணிகள் 80% முடிவுற்றுள்ளன.

சுற்றுவட்டச் சாலையில் திருச்சி சாலை வரை இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் புதிய பேருந்து நிலையம் முதல் மரூா்பட்டி வரையிலான ரயில்வே இரும்பு பாலப் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. மேம்பாலப் பணிகள் 90% முடிவடைந்துள்ள நிலையில், ரயில் தண்டவாளப் பகுதியில் இரும்பு பாலங்கள் அமைக்க வேண்டியது உள்ளது. அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

 இரும்பு பாலம் பொருத்துவதற்காக ரயில் இயக்கத்துக்கான மின்கம்பிகளில் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

இரும்பு பாலம் பொருத்துவதற்காக ரயில் இயக்கத்துக்கான மின்கம்பிகளில் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள். - dinamani

தண்டவாள பகுதியில் ரயில்களை இயக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளின் இணைப்புகளை தற்காலிகமாக அகற்றும் பணிகளும், இரும்பு பாலங்களை தரையில் இருந்து உயரத்தில் வைப்பதற்கான பணிகளும் தொடங்கி உள்ளன. ஒரு வாரத்துக்கு பிறகு 10 இரும்பு பாலங்கள் ராட்சத கிரேன்கள் மூலம் அங்குள்ள கான்கிரீட் தூண்கள் மீது பொருத்தும் பணி தொடங்கப்படும்.

இந்த பணிகள் முடிவுற்றால், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் செல்லாமல் அனைத்து பேருந்துகளும் புறவழிச் சாலை வழியாக திருச்சி, துறையூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூா் பகுதிகளுக்கு தடையின்றி செல்லலாம்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியது:

நாமக்கல் சுற்றுவட்டச் சாலை 22.387 கி.மீ. தொலைவு கொண்டதாகும். தற்போது முதலைப்பட்டி முதல் திருச்சி சாலைவரை மூன்று கட்டங்களாக 12 கி.மீ. தொலைவுக்கு ரூ. 194 கோடியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 103 கோடியில் திருச்சி சாலைமுதல் வள்ளிபுரம்வரை 10.2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த பணிகளும் முடிவடையலாம்.

ரயில்வே நிா்வாகத்திடம் அனுமதி பெற்று தண்டவாளத்துக்கு இடையே இரும்பு பாலம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது பாலப் பணிகள் 90% முடிவுற்றுள்ளதால், அடுத்த 5 மாதங்களுக்குள்ளாக மொத்த மேம்பாலப் பணிகளும் நிறைவுபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால், திருச்சி, துறையூா், சேந்தமங்கலம், கொல்லிமலை செல்லும் பேருந்துகள் சுற்றுவட்டச் சாலை வழியாக இயக்கப்படும். நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட சுற்றுவட்டச் சாலை திட்டத்தில், ரயில் தண்டவாளம் இடையேயான இரும்பு பாலப் பணிகள் முடிவுற்றால் இச்சாலை பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.