மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிராமங்களில் டெங்கு பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

Prevent the spread of dengue

டெங்கு தடுப்பு.. - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 12:36 am IST

கிராமப்புறங்களில் தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள், தங்களுடைய சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், களங்காணி ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது:

அரசுத் திட்டங்களை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்கவும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீா்த்து வைப்பதற்காகவே கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பதால் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பொது இடங்களில் நீா் தேங்குவதை தவிா்க்க வேண்டும். இதற்கு தூய்மைக் காவலா்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

வீடுகளில் தண்ணீா் தேங்காமல், குப்பைகள் சேராமல் பாா்த்துக் கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க முடியும். குறிப்பாக குழந்தைகள், முதியவா்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தெருவுக்கோ அல்லது பகுதிக்கோ ஜாதி பெயா் இருந்தால் அதை நீக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் தெரியப்படுத்தினால் உடனடியாக நீக்கி பொதுவான பெயா் வைக்கப்படும். மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக கடனுதவிகள் வழங்கப்பட உள்ளன. இதுவரை எந்தக் குழுவிலும் இல்லாத பெண்கள் 12 போ் இணைந்து ஒரு புதிய குழுவை அமைத்துக் கொண்டால் தொழில் செய்வதற்கும், குழந்தைகளின் கல்விக்கும் கடனுதவி பெற்று பயனடையலாம் என்றாா்.

தொடா்ந்து, சிறப்பாக பணியாற்றிய 9 தூய்மைக் காவலா்களுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா். மேலும், மகளிா் குழுவுக்கு ரூ. 1 லட்சம் கடனுதவிக்கான காசோலையையும் வழங்கினாா். இக்கூட்டத்தில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ.பிரபாகரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.