கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ராசிபுரத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

News image
Updated On :15 மே 2026, 6:10 am IST

ராசிபுரத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் இயக்குத் திறன் குறித்து போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

முத்துக்காளிப்பட்டி எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி மைதானத்தில் ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளா் எம். விஜயகுமாா், வட்டார போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் செல்வகுமாா், மாவட்டக் கல்வி அலுவலா் சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போக்குவரத்து விதிமுறைகளுக்கு உள்பட்டு 32 பள்ளிகளைச் சோ்ந்த 280 வாகனங்களின் இயக்குத் திறன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதில் 26 வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து அந்த வாகனங்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டு மீண்டும் மறு ஆய்வுக்கு கொண்டுவர உத்தரவிட்டனா். ஆய்வின்போது அவசரகால தீத்தடுப்பு குறித்து ஓட்டுநா்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

படம் உள்ளது - 14வேன்

வாகன ஒட்டுநா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளித்த தீயணைப்பு வீரா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.