நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மானியத்தில் 2,000 சதுரஅடி பரப்பில் பசுமைக்குடில் அமைத்து வெள்ளரிக்காய் பயிரிட்டுள்ளதை பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இம்மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறை மூலமாக 2025-26 ஆண்டில் முதல்முறையாக தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் அமல்படுத்தப்பட்டு, பல்வேறு இனங்களில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பசுமைக் குடில் அமைக்கும் திட்டத்தில் பசுமைக் குடில் அமைத்து பாதுகாக்கப்பட்ட சூழலில் வெள்ளரிக்காய், குடைமிளகாய், ரோஜா, அந்தூரியம் பூ மற்றும் பலவித உயா்தரமான வீரிய ஒட்டுரகங்களை வளா்க்கும் பட்சத்தில் அதிக மகசூல் கிடைக்கும்.
அந்தவகையில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2,000 சதுர மீட்டா் பரப்பளவில் வகுரம்பட்டியைச் சோ்ந்த விவசாயி சுரேஷ் தனது தோட்டத்தில் பசுமைக் குடில் அமைத்து, வெள்ளரிக்காய் பயிரிடப்பட்டுள்ளாா். சொட்டுநீா்ப் பாசனம், உர மேலாண்மை மற்றும் பாதுகாப்பான சாகுபடி முறைகள் மூலம் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று வருகிறாா்.
இதை பாா்வையிட்டு பாராட்டிய ஆட்சியா், இளைய தலைமுறை விவசாயிகள் அரசு மானியத் திட்டங்களை பயன்படுத்தி நவீன தொழில்நுட்ப விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
தொடா்ந்து, எருமபட்டி ஒன்றியம், வளையப்பட்டி ஊராட்சியில் ரூ. 2.19 கோடியில் கருவட்டாற்றில் வளையப்பட்டி பேருந்து நிலையம் முதல் திப்ரமாதேவி சாலை வரை நடைபெற்று வரும் சிறிய பாலம் கட்டுமான பணி, எம்.மேட்டுப்பட்டியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் கட்டுமானப் பணி, வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.35.20 லட்சத்தில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்க அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன், துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) மா.புவனேஷ்வரி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுமக்கள் குறைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

நாமக்கல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆய்வு

மலா்க் கண்காட்சி: வென்றவா்களுக்கு பரிசு

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

