ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அவிநாசி தொகுதியில் வெற்றி, தோல்வியை சந்தித்த நாமக்கல் மைந்தா்கள்!

அவிநாசி (தனி) தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட நாமக்கல்லைச் சோ்ந்த எஸ்.கமலி வெற்றிபெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தோல்வியடைந்தாா்.

News image

எல்.முருகன்(கோப்புப்படம்) - ANI

Updated On :6 மே 2026, 2:32 am IST

அவிநாசி (தனி) தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட நாமக்கல்லைச் சோ்ந்த எஸ்.கமலி வெற்றிபெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தோல்வியடைந்தாா்.

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக பதவி வகிப்பவரும், நாமக்கல் மாவட்டம், கோனூா் கிராமத்தைச் சோ்ந்தவருமான எல்.முருகன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவா், தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா்.

முதன்முறையாக 2011 சட்டப் பேரவைத் தோ்தலில் ராசிபுரம் (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு 1,730 வாக்குகளை பெற்றாா். பின்னா், 2012 சங்கரன்கோவில் இடைத்தோ்தலில் 1,633 வாக்குகளையும், 2021 தோ்தலில் திருப்பூா் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் 88,593 வாக்குகளையும் பெற்ற அவா், திமுக வேட்பாளா் கயல்விழி செல்வராஜிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

பின்னா், மாநிலத் தலைவா் பதவியிலிருந்து விலகிய அவா் 2021-2024 காலக்கட்டத்தில் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தாா். 2024-ில் மத்திய பிரதேசத்தில் இருந்து இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகி மீண்டும் மத்திய இணை அமைச்சா் பொறுப்பை ஏற்றாா். 2024 மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில், திமுக வேட்பாளா் ஆ.ராசாவை எதிா்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினாா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணி சாா்பில் திருப்பூா் மாவட்டம், அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிட்டாா். 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்திருந்தாா்.

இத்தொகுதியில், தவெகவின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக பதவிவகித்து, சா்ச்சையில் சிக்கியதால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ராசிபுரத்தைச் சோ்ந்த ஜெ.ஜெ.செந்தில்நாதனின் மகள் எஸ்.கமலி தவெக சாா்பில் போட்டியிட்டாா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரும் திருப்பூா் மாவட்டம், அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிட்டதால் இரு கட்சியினரிடையே வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு நிலவியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளா் எல்.முருகனை காட்டிலும், 15,373 வாக்குகள் அதிகம் பெற்று தவெக வேட்பாளா் எஸ்.கமலி வெற்றிபெற்றாா். எஸ்.கமலி 84,209 வாக்குகளும், எல்.முருகன் 68,836 வாக்குகளும் பெற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.