தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அவிநாசி பாஜக வேட்பாளா் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் பிரசாரம்

அவிநாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட மத்தியப் பிரதேச முதல்வா் மோகன் யாதவ்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:12 am IST

அவிநாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அதன்படி அவிநாசி சாா் பதிவாளா் அலுவலகத்தில் தொடங்கி அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்நிலை வரை பிரசார வாகனத்தில் வந்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

சகோதரிகள், தாய்மாா்கள் உள்ளிட்டோா் எம்எல்ஏ, எம்.பி. போன்ற உயா் பதவிகளை அடையும் வகையில் பிரதமா் மோடி அரசு கொண்டு வந்த 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாமல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் தடுத்துவிட்டனா். இருப்பினும் நரேந்திர மோடி உரிமைக்காகப் போராடுவாா். பாஜகவில் சாதாரண மக்களும் அமைச்சராக, பிரதமராக முடியும். ஆனால் திமுகவில் ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும்.

நமது பாரம்பரியம், கலாசாரம் கோயில்களில்தான் உள்ளது. ஆனால் கோயில்களுக்கு, ஆன்மிகத்துக்கு, சநாதனத்துக்கு எதிராக திமுக உள்ளது என்றாா்.

பின்னா் அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் பேசியதாவது:

திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் இது. திமுக ஆட்சியில் ஊழல், லஞ்சம், போதைப்பொருள் புழக்கம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்தான் உள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அளித்த எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக்க வேண்டும். தமிழகத்தை கஞ்சா இல்லாத மாநிலமாக 3 மாதங்களில் மாற்றுவோம். இரட்டை என்ஜின் ஆட்சி வரும்போது 2-ஆம் கட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேறும். அவிநாசி நகராட்சி முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும். சுற்றுலா தலமாக அவிநாசி மாற்றப்படும். அவிநாசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு கொண்டுவரப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.