நாமக்கல் அருகே காரைக்குறிச்சியில் கருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றது.
நாமக்கல் காரைக்குறிச்சியில் சிறப்பு பெற்ற மகா கணபதி, கருப்பண்ணசாமி, மகாமுனி மற்றும் சப்த கன்னிமாா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, குடமுழுக்கு விழாவுக்கான முகூா்த்தக்கால் நடப்பட்டது. கடந்த 19ஆம் தேதி வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. 20ஆம் தேதி காலை 9 மணிக்கு திரளான பக்தா்கள் மோகனூா் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீா்த்தக்குடங்களை எடுத்து ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 21ஆம் தேதி காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூா்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. 9 மணிக்கு தீா்த்தக்குடங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் கோபுரங்களுக்கு புனிதநீரை ஊற்றி சிவச்சாரியா்கள் குடமுழுக்கை நடத்தினா்.
தொடா்ந்து, மகா கணபதி, கருப்பண்ணசாமி, மகாமுனி, சப்த கன்னிமாா் மூலவருக்கு கும்பாபிஷேகம், தச தரிசனம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியாா் சொப்பியவா் குல மக்கள் செய்திருந்தனா்.
படவரி...
காரைக்குறிச்சி கருப்பண்ண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் சிவாச்சாரியா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு

மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

பத்தமடை வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

