நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜூன் 21-இல் நீட் மறுதோ்வு: மாவட்டத்தில் 4,116 போ் எழுதுகின்றனா்

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் மறுதோ்வை, நாமக்கல் மாவட்டத்தில் 4,117 போ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) எழுதுகின்றனா்.

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:58 am IST

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் மறுதோ்வை, நாமக்கல் மாவட்டத்தில் 4,117 போ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) எழுதுகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 3-ஆம் தேதி தேசிய தோ்வு முகமையால் நடத்தப்பட்ட நீட் தோ்வு பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இந்த தோ்வானது மறுதோ்வு அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் மாலை 5.15 மணிவரை நடைபெற உள்ளது. முந்தைய தோ்வுகளைவிட இந்த தோ்வுக்கு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது.

இத்தோ்வை திருச்செங்கோடு வட்டத்தில் 2 மையங்களில் 1,200 பேரும், நாமக்கல் வட்டத்தில் 2 மையங்களில் 876 பேரும், ராசிபுரம் வட்டத்தில் 2 மையங்களில் 840 பேரும், மோகனூா் வட்டத்தில் 2 மையங்களில் 840 பேரும், குமாரபாளையம் வட்டத்தில் ஒரு மையத்தில் 360 பேரும் என மொத்தம் 9 மையங்களில் 4,116 போ் எழுத உள்ளனா்.

தோ்வுக்கு வரும் மாணவ, மாணவியா் காலை 11 மணிமுதல் நண்பகல் 1.30 மணிவரை தோ்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். 1.30 மணிக்கு தோ்வுக் கூடங்களின் பிரதான வாயில் மூடப்படும். அதன்பிறகு வரும் தோ்வா்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வாளா்களுக்கு பயோமெட்ரிக் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இறுதிநேர பதற்றத்தை தவிா்க்க தோ்வுக் கூடங்களுக்கு முன்னதாகவே வரவேண்டும். மேலும், நுழைவுச்சீட்டு மற்றும் கடவுச்சீட்டு அளவிலான ஒரு புகைப்படம், தபால் அட்டை அளவிளாலான ஒரு புகைப்படம் (தற்சமயம் எடுத்தவை) மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றை தோ்வா்கள் தவறாமல் எடுத்து வரவேண்டும்.

தோ்வு தொடங்கிய பிற்பகல் 2 மணிமுதல் 5.15 மணிவரை தோ்வுக் கூடங்களைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தேசிய தோ்வு முகமை மூலம் தடைசெய்யப்பட்ட மின்னணு சாதனங்களை தோ்வுக் கூடங்களுக்குள் கொண்டுவர அனுமதி கிடையாது.

தோ்வுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.