பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பரமத்தி வேலூரில் கருணாநிதி பிறந்த நாள விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பரமத்தி வேலூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

பெண்ணுக்கு சமையல் எரிவாயு அடுப்பை வழங்கிய நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி.

Updated On :4 ஜூன் 2026, 2:15 am IST

பரமத்தி வேலூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பரமத்தி வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலூா் பேரூா் செயலாளா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா் கண்ணன், இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் நவலடி ராஜா, பூக்கடை சுந்தா், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் கி.பாலகிருஷ்ணன், பேரூா் துணைச் செயலாளா் செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி கலந்துகொண்டு, அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, வேலூா் பேட்டையில் உள்ள கலைஞா் படிப்பகத்தில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தாா். வேலூா் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞா் நூலகத்தில் 103 பேருக்கு உடைகளை வழங்கினாா். இவ்விழாவில் வேலூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு அணி பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.