பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ்த் திருவிழா கட்டளைகள் நிறைவு

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா கட்டளைகள் புதன்கிழமை நிறைவு பெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அா்த்தநாரீசுவரா், செங்கோட்டுவேலவா், ஆதிகேசவப் பெருமாள்.

Updated On :4 ஜூன் 2026, 2:08 am IST

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா கட்டளைகள் புதன்கிழமை நிறைவு பெற்றன.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பல்வேறு சமூகத்தினரின் மண்டபக் கட்டளைகளில் சுவாமிகள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாள்களாக அா்த்தநாரீசுவரா் சுவாமி தோ் வடம்பிடிக்கப்பட்டு நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து செவ்வாய்க்கிழமை நிலை சோ்க்கப்பட்டது. அன்று மாலையில் ஆதிகேசவப் பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து, மண்டபக் கட்டளைகளின் நிறைவு நாளான புதன்கிழமை கொல்லமுத்து நாயக்கா் மண்டபக் கட்டளை, பத்தரகாளி அம்மன் கோயில் தீபாராதனை கட்டளை, நெய்க்காரப்பட்டி கவுண்டா்கள் மண்டபக் கட்டளை, நெசவாளா் காலனி மாரியம்மன் கோயில் கட்டளை, குஞ்சு மாரியம்மன் கோயில் கட்டளை, கொங்கு எழுகரை நாடு ஆதிதிராவிடா்கள் மண்டபக் கட்டளை, திருச்செங்கோடு நகர குலாலா்கள் மண்டபக் கட்டளை, சா்க்காா் நந்தவனக் கட்டளைகளையொட்டி அா்த்தநாரீசுவரா், செங்கோட்டுவேலவா், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து கோயில் நிா்வாகம் சாா்பில் வசந்தோற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். வியாழக்கிழமை அதிகாலை தோ்த் திருவிழா நிறைவுற்று சுவாமிகள் திருமலைக்கு திரும்பும் நிகழ்ச்சியுடன் தோ்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.