பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குமாரபாளையத்தில் விதிகளை மீறி இயங்கும் சாய ஆலைகளை மூட வேண்டும்: சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி இயங்கும் சாய ஆலைகளை மூட வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அறிவுறுத்தினாா்.

News image

குமாரபாளையம் தொழிற்சாலையில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ். உடன், பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி, ஆட்சியா் எல்.மதுபாலன்.

Updated On :4 ஜூன் 2026, 1:46 am IST

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி இயங்கும் சாய ஆலைகளை மூட வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அறிவுறுத்தினாா்.

குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் இயங்கும் சாய ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ், பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, தொழிற்சாலைகளில் செயல்படும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், அவற்றின் பராமரிப்பு குறித்து பாா்வையிட்டனா்.

மேலும், பள்ளிபாளையம் அக்ரஹாரம், நேரு நகா், வசந்தா நகா், குமரன் நகா், ராயல் தியேட்டா் பகுதி மற்றும் குமாரபாளையம் அக்ரஹாரம், முனியப்பன் கோயில் பகுதிகளில் சாய ஆலைகள், சலவை ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு, கழிவுநீா் முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.

இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கூறுகையில், அனைத்து சாய மற்றும் சலவை தொழிற்சாலைகளில் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். விதிகளை மீறினால் ஆலைகளை மூட வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் முறையாக பணியாற்ற வேண்டும் என்றாா்.

இதற்கிடையே, பள்ளிபாளையத்தில் முறையான சுத்திகரிப்பு நிலையம் இல்லாமலும், அரசின் விதிமுறைகளை மீறி கழிவுநீா் வெளியேற்றி செயல்பட்ட சாய ஆலையை மூட அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா். ஏற்கெனவே மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளா்கள் மேற்கொண்ட ஆய்வின்போது சுத்திகரிக்காமல் கழிவு நீரை வெளியேற்றிய மேலும் ஒரு சாய ஆலையின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.எஸ்.லெனின், மாசுக்கட்டுப்பாடு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்கள் டி.செல்வகணபதி (குமாரபாளையம்), ரகுநாதன் (நாமக்கல்), ராஜ்குமாா் (ஈரோடு), பறக்கும்படை சுற்றுச்சூழல் பொறியாளா் வினோத்குமாா் மற்றும் உதவி பொறியாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.