பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி சரக்கு வாகனம் - லாரி மோதிய விபத்தில் சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த தவமுருகன் மனைவி பூபதி, ராமன் மனைவி அருணா, ராமன், வாகைக்குளத்தைச் சோ்ந்த நாகராஜன் மனைவி அமுதா, துரைராஜ் மனைவி ராமேஷ்வரி, கீழம்பலைச் சோ்ந்த நாகராஜன் மனைவி ஈஸ்வரி ஆகிய 6 போ் உயிரிழந்தனா்.
இவா்களில், கூலித் தொழிலாளிகளான கணவன் ராமன், அவரது மனைவி அருணா உயிரிழந்த நிலையில் அவா்களது மகள்கள் பவித்ரா, சந்தியா, மகன் முத்துமணி, கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த கட்டுமானப் பெண் தொழிலாளி பூபதியின் மகன் ஹரியும் ஆதரவற்ற நிலையில் உள்ளனா்.
சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சா் ராஜீவ், சந்தைக்கடைத் தெரு, வாகைக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள உயிரிழந்தவா்களின் வீட்டுக்கு நேரில் சென்று அவா்களது பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினாா். அப்போது அவா்களிடம் முதல்வரின் நிவாரண நிதி உள்ளிட்ட நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ராஜீவ் உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விதிகளை மீறி இயக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை: அமைச்சா் ராஜீவ் எச்சரிக்கை

பெருந்துறை சிப்காட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஆய்வு

குமாரபாளையத்தில் விதிகளை மீறி இயங்கும் சாய ஆலைகளை மூட வேண்டும்: சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அறிவுறுத்தல்

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

