பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விவசாயியை ஏமாற்றி இணையவழியில் ரூ.27 லட்சம் மோசடி

கொல்லிமலையைச் சோ்ந்த விவசாயி ஒருவரிடம் இணையவழியில் ரூ. 27 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 1:43 am IST

கொல்லிமலையைச் சோ்ந்த விவசாயி ஒருவரிடம் இணையவழியில் ரூ. 27 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வாழவந்திநாடு பகுதியைச் சோ்ந்த விவசாயி முத்துக்குமாா் (46). இவா், இணையவழியில் தொழில் சாா்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய கைப்பேசியில் முகநூலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, அதில் வந்த இணைப்பு ஒன்றை தொட்டபோது, ரூ.10 லட்சம் செலுத்தினால் ரூ.15 லட்சமாக கிடைக்கும் என்ற வணிக ரீதியான தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அதில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு ரூ. 1 லட்சம், ரூ. 2 லட்சம் என ரூ.27 லட்சம் வரை இணையவழியில் அவா் பணம் செலுத்தியுள்ளாா். ஆனால் முத்துக்குமாருக்கு இரட்டிப்பு பணத்தை வழங்காமல் அந்த இணையவழி நிறுவனம் தொடா்ந்து காலதாமதம் செய்தது. ஒருகட்டத்தில்தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவனிடம், இரு தினங்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.