திருச்செங்கோட்டில் கடந்த மாதம் அடுத்தடுத்து 2 ஜவுளிக்கடைகளில் ரூ. 6.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 2 ஜவுளிக்கடைகளில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அடையாளம் தெரியாத மா்மநபா்கள் கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து கடைக்குள் புகுந்து, கண்காணிப்பு கேமரா இணைப்பைத் துண்டித்துவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனா். தனிப்படை அமைத்து கொள்ளையா்களை தேடிவந்தனா். இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது கா்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம், ஆனேக்கல் வட்டத்தைச் சோ்ந்த நாகராஜ் (29) மற்றும் அவரது உறவினா் ஒருவா் எனத் தெரிய வந்தது. இதையடுத்து நாகராஜை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 2 கடைகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 6.50 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் அவரை திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தலைமறைவு குற்றவாளிகள் இருவா் கைது

பவானி அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் கைது!
சுத்தமல்லி பகுதியில் பைக்குகள் திருட்டு: 4 போ் கைது
இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இருவா் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
