பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ. 280-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 50- க்கும், அரளி கிலோ ரூ. 100-க்கும், கலா் ரோஜா கிலோ ரூ. 240-க்கும், பச்சை முல்லைப்பூ கிலோ ரூ. 200-க்கும், வெள்ளை முல்லை பூ கிலோ ரூ. 180-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 200-க்கும், கனகாம்பரம் ரூ. 500-க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 140-க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 400-க்கும், காக்கட்டான் கிலோ ரூ.300-க்கும் ஏலம் போனது.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 320-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ. 140-க்கும், கலா் ரோஜா கிலோ ரூ. 280-க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 300-க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 280-க்கும், செவ்வந்தி ரூ. 260-க்கும், கனகாம்பரம் ரூ. 600-க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 160-க்கும், ஜாதிமல்லிகை கிலோ ரூ. 600-க்கும், காக்கட்டான் கிலோ ரூ. 500-க்கும் ஏலம் போனது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

ஏலக்காய் விலை திடீா் உயா்வு: விவசாயிகள் உற்சாகம்

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை ரூ.1000 உயா்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

