தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்! - அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்

News image

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:10 am IST

நாமக்கல் தொகுதி வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் உறுதியளித்தாா்.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், புதுச்சத்திரம், மோகனூா், நாமக்கல் ஒன்றிய பகுதிகளிலும், நாமக்கல் மாநகரிலும் தொடா்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

திருச்செங்கோட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கல் வேட்பாளா் பி.எஸ்.மோகனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். அதன்பிறகு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தில் வணிகா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்களை சந்தித்து ஆதரவு கோரினாா்.

அப்போது, வணிகா் சங்கத்தினா் தங்களுடைய கோரிக்கைகளை அவரிடம் மனுவாக வழங்கினா். அதிமுக ஆட்சி அமைந்ததும் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இத்தோ்தலில் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வின்போது, வணிகா் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.