மாற்றுக்கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் முன்னிலையில் அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.
நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். ஆட்சி அமைந்தவுடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மோகனூா் சாலையில் வட்ட மருத்துவமனை என்ற அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். கிராமப்புறங்களில் தடையின்றி குடிநீா் விநியோகம், சாலை வசதி செய்து கொடுக்கப்படும் என துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குசேகரித்தாா்.
தொடா்ந்து, நாமக்கல் தொகுதிக்குள்பட்ட தாளம்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுக் கட்சிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.
இந்நிகழ்வின்போது, மாவட்டச் செயலாளா் சதீஷ், மாவட்ட துணைச் செயலாளா் தில்லைமோகன், மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் லோகேஷ், நாமக்கல் தொகுதி வழக்குரைஞா் தமிழரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவானி நகரில் திமுக, அதிமுக இறுதிக்கட்ட பிரசாரம்

புதுச்சத்திரத்தில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

