நாமக்கல் மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலா்கள், கோழிப் பண்ணையாளா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் துா்காமூா்த்தி பேசியதாவது:
ராசிபுரம் அருகே ஆா். பட்டணம் கிராமத்தில் கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்பு ஏற்பட்டதை தொடா்ந்து துறை அலுவலா்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கோழிப் பண்ணையாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கோழிப் பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கவும், வனப் பறவைகள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வாகனங்கள் பண்ணையில் நுழையும்போது கிருமிநாசினி தெளித்த பிறகே அனுமதிக்க வேண்டும்.
பண்ணையாள்கள் கிருமி நாசினி நிரம்பிய தொட்டியில் கால்களை நனைத்த பிறகே வளாகத்திற்குள் செல்ல அறிவுறுத்த வேண்டும். பண்ணை வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்குமாறு பண்ணையாளா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், கோழிப் பண்ணைகளில் கோடைகால பராமரிப்பு முறைகள் முறையாக பின்பற்றி கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படாத வகையில் பராமரிக்க பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கோழிப் பண்ணைகளில் இறப்புகளை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் 45 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினா், நாமக்கல் மாவட்ட அனைத்து கோழிப்பண்ணைகள், நீா்நிலைகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ராசிபுரம், வெண்ணந்தூா், மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள கோழிப் பண்ணைகளை தினமும் கண்காணிக்க கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை அலுவலா்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
கூட்டத்தில் இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) (கூ.பொ) எஸ்.ச. அருள்பிரகாஷ்ராஜ், உதவி இயக்குநா்கள் விஜயகுமாா், விஜயமூா்த்தி உள்பட கால்நடை மருத்துவா்கள், துறைச் சாா்ந்த அலுவலா்கள் மற்றும் கோழிப் பண்ணையாளா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல்: 44 மயில்கள் உயிரிழப்பு

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: 40 மயில்கள் உயிரிழப்பு

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை! பொது சுகாதாரத் துறை!!

கோழிப் பண்ணைகளில் ஈக்கள் உற்பத்திக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

