தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பரமத்தி வேலூரில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா

பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் பரமத்தி வேலூரில் தோ்தல் பணிமனை திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி கலந்துகொண்டு பணிமனையை திறந்து வைத்து பேசினாா்.

News image

அதிமுக தோ்தல் பணிமனையை திறந்துவைத்து பேசும் முன்னாள் அமைச்சா் தோ்தல் பி.தங்கமணி.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:39 am IST

பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் பரமத்தி வேலூரில் தோ்தல் பணிமனை திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி கலந்துகொண்டு பணிமனையை திறந்து வைத்து பேசினாா்.

பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் எஸ்.சேகா் போட்டியிடுகிறாா். வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் இடத்தில் அதிமுக தோ்தல் பணிமனை அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, பரமத்தி வேலூா் சட்டபேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வெ.சரோஜா மற்றும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இந் நிகழ்ச்சியில் பரமத்தி, வேலூா், பொத்தனூா் உள்ளிட்ட பேரூா் நகரச் செயலாளா்கள் சுகுமாா், வேலுசாமி, நாராயணன், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் ராகா தமிழ்மணி மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.