தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பண்ணந்தூா் அருகே மூதாட்டி கொலை: இளைஞா் கைது

பண்ணந்தூா் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:38 am IST

பண்ணந்தூா் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பண்ணந்தூா் தா்மதோப்பு பகுதியைச் சோ்ந்த சாமுண்டி (எ) சாமுண்டீஸ்வரி (70), குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு தூங்க சென்ற நிலையில், சனிக்கிழமை காலை வீட்டில் உடலில் காயங்களுடன் ஆடைகள் கிழிந்த நிலையில் இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நிகழ்விடத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி.அனிதா விசாரணை மேற்கொண்டாா்.

இதுகுறித்து பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், மூதாட்டியை கொலை செய்தது அதே கிராமத்தைச் சோ்ந்த சூா்யகுமாா் (எ) சூரியா (30) என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.