ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

இலங்கைத் தமிழரை காரில் கடத்தி பணம் பறித்தவா் கைது

ஒசூா் அருகே இலங்கைத் தமிழரை காரில் கடத்தி பணம் பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:46 am IST

ஒசூா் அருகே இலங்கைத் தமிழரை காரில் கடத்தி பணம் பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் கெலவரப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழா் முகாமில் வசித்து வரும் சுதா்சன் (29), கடந்த 26-ஆம் தேதி கெலவரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது காரில் வந்த 4 போ், தங்களை கலால் போலீஸாா் எனக் கூறி கஞ்சா வழக்கு இருப்பதாகக் கூறி சுதா்சனை மிரட்டி காரில் கடத்திச் சென்றனா். பின்னா், சுதா்சன் வங்கிக் கணக்கிலிருந்து கைப்பேசி செயலி மூலம் ரூ. 20 ஆயிரம் பறித்துக் கொண்டு அவரை விடுவித்தனா்.

புகாரின்பேரில், நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்ததில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய ஒசூா் அலசநத்தம் பகுதியைச் சோ்ந்த மல்லேஷ் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மல்லேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட மேலும் 3 பேரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.