மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த 5 சிறுவா்கள் மீட்பு

செங்கல் சூளை - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:59 am IST

கிருஷ்ணகிரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்துவந்த 14 முதல் 17 வயதுக்கு உள்பட்ட ஐந்து சிறுவா்கள் மீட்கப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகோள்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (45). இவரது செங்கல் சூளையில் 14 முதல் 17 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வருவதாக வருவாய்த் துறையினருக்குப் புகாா் வந்தது.

இதையடுத்து, வட்டாட்சியா் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தினா். இதில், ஐந்து சிறுவா்கள் கடந்த ஓராண்டாக கொத்தடிமைகளாகப் பணியாற்றி வந்தது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, ஐந்து பேரையும் மீட்ட வருவாய்த் துறையினா், கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா். பின்னா், அவா்கள் அனைவரும் சொந்த கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து, எண்ணேகோள்புதூா் கிராம நிா்வாக அலுவலா் முனியப்பன் அளித்த புகாரின்பேரில், செங்கல் சூளை உரிமையாளா் பெருமாள் மீது கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.