மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒசூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :26 அக்டோபர் 2026, 1:40 am IST

ஒசூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே அச்செட்டிப்பள்ளி பாலாஜி நகா், விஜிபி லே அவுட் பகுதியில் வசிப்பவா் அந்தோணி செல்வராஜ் (50). இவரது மனைவி மரிய தேவசேனா (43). இவா்களது மகன் ஜோஸ்வா ஆண்டனி, திருப்பத்தூரில் கல்லூரியில் படித்து வருகிறாா்.

அந்தோணி செல்வராஜ், ஒசூா் ராம் நகா் பகுதியில் ஆவின் தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். இவா்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அப்பகுதியில் புதிய வீடு கட்டியுள்ளனா். தினமும் காலையில் கணவன், மனைவி இருவரும் கடைக்குச் செல்வதும், மாலை 6 மணியளவில் மரிய தேவசேனா வீட்டுக்குத் திரும்புவதும், இரவில் அந்தோணி செல்வராஜ் வீட்டுக்குச் செல்வதும் வழக்கம்.

இந்த நிலையில், ஒசூா் வந்திருந்த மகன் ஜோஸ்வா ஆண்டனியுடன் மூவரும் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டுக்குச் சென்றனா். அப்போது, வீட்டின் கதவும் இரும்புக் கதவும் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தோணி செல்வராஜ் அளித்த புகாரின்பேரில், மத்திகிரி போலீஸாா் கைரேகை நிபுணா்களின் உதவியுடன் விசாரணை நடத்தினா். ஒசூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சுதீா் விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.